உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வங்களான மரங்கள்!

தெய்வங்களான மரங்கள்!

*நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் உறங்காப்புளி என்ற புளியமரத்தின் வடிவில் லட்சுமணர் இருக்கிறார். நம்மாழ்வார் இந்த மரத்தின் அடியில் இருந்தபடியே மகாவிஷ்ணுவை வணங்கி பாசுரம் பாடினார்.
*பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்கலக்கோட்டை ஆவுடையார்கோவிலில் உள்ள ஆலமரம், சிவபெருமானாக வழிபடப்படுகிறது. இம்மரத்தின் ஒரு பகுதியை லிங்கம் போல அலங்காரம் செய்து பூஜிக்கின்றனர்.
*திருவொற்றியூரில் தேவாரம் பாடிய சுந்தரருக்கும், சங்கிலியார் என்பவருக்கும் ஒரு மகிழமரத்தடியில் திருமணம் நடந்தது. சிவனே இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். இதன் நினைவாக மரத்தடியில் சிவன் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த மரத்தையும் சிவனாகக் கருதி வழிபடுகின்றனர்.
*குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் உள்ள ஆதி பலாமரத்தை குறும்பலாநாதர் (சிவன்) என்ற பெயரில் வணங்குகின்றனர்.
*திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் உள்ள அரச மரத்தின் கீழ் சுவாமி
தேவர்களுக்காக தாண்டவம் ஆடினார். இதனால் பக்தர்கள் இம்மரத்தை சிவனாக
வழிபடுகிறார்கள். மரங்களின் முக்கியத்துவமும், அவற்றைத் தெய்வமாகக் கருதி பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் இதன்மூலம் தெரிய வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !