உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு

ஆஞ்சநேயர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு

சூளகிரி: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், பக்தர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். ஓசூர் அடுத்த சூளகிரியில் இருந்து, தியாகரசனப்பள்ளி செல்லும் சாலையில், புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு, கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 5,000 தீப விளக்குகள் ஏற்றி, பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில், சூளகிரி, நல்லராலப்பள்ளி, தியாகரசனப்பள்ளி, பாளையம் உட்பட, 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !