விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை துவக்கம்
ADDED :3278 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார பூஜை இன்று துவங்குகிறது. கார்த்திகை முதல் திங்கள்கிழமையொட்டி, விருத்தாசலம் பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் முதல் சோமவார பூஜை இன்று துவங்குகிறது. இதையொட்டி, விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 4:30க்கு மேல் 6:00 மணிக்குள் 108 சங்காபிஷேகம் நடக்கிறது. இதேபோல், கார்த்திகை மாத திங்கள் கிழமைகளில் சோமவார பூஜைகள் நடக்கிறது. மேலும், இன்று காலபைரவாஷ்டமியையொட்டி, மாலை 6:00 மணியளவில் கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது.