பாலக்கரை சபரி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை பூஜை துவக்கம்
ADDED :3280 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரை சபரி ஐயப்பன் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத பூஜை துவங்கி நடக்கிறது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, விருத்தாசலம் பாலக்கரை சபரி ஐயப்பன் சுவாமி கோவிலில் கடந்த 16ம் தேதி பூஜை துவங்கியது. வரும் தை மாத முதல் நாள் வரை பூஜை நடக்கிறது. இதையொட்டி, தினசரி காலை, மாலை ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, படி பூஜை, அன்னதானம் நடக்கிறது. வரும் டிச., 15ம் தேதி சக்தி பூஜையை முன்னிட்டு மணிமுக்தாற்றில் இருந்து சபரி ஐயப்பன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. அப்போது ஐயப்ப பக்தர்கள் கருப்புசாமி, மஞ்சள்மாதா வேடமணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மறுநாள் 16ம் தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது. 2017 ஜனவரி 14ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது.