சாய்பாபா பக்தர்கள் ஊர்வலம்
ADDED :3280 days ago
ஓமலூர்: ஓமலூரில், சாய்பாபா பிறந்தநாள் முன்னிட்டு, அவரது படத்துடன், பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். ஓமலூர், பிருந்தாவன் தியேட்டர் அருகே, சத்யசாயி சேவா சமிதியில், சாய்பாபாவின், 91வது பிறந்த நாள் முன்னிட்டு, நேற்று அவரது படத்துக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, பஜனை நடந்தது. பின், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சாய்பாபா திருவுருவ படத்துடன், மாரியம்மன் கோவில், கடைவீதி, அக்ரஹாரம், பஸ் ஸ்டாண்ட் வழியாக, பக்தர்கள் ஊர்வலமாக சென்று, சமிதியை வந்தடைந்தனர்.