அஷ்டதள பாதபத்மாராதனம்
ADDED :3640 days ago
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத் தாமரைகளால் மூல மூர்த்திக்கு நடைபெறும் அர்ச்சனை நிகழ்ச்சியே அஷ்டதள பாத பத்மாராதனம். இது சுமார் 20 நிமிடம் நடைபெறும். கி.பி. 1984 ஆம் ஆண்டு தி.தி. தேவஸ்தான பொன் விழா ஆண்டினை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவை இது. ஐதராபாத்தை சார்ந்த ஒரு முஸ்லீம் பக்தர் இதற்கு தேவையான 108 தங்கத்தாமரைகளை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் இது ஆர்ஜித சேவையாக அறிவிக்கப்பட்டது. 108 தங்கத்தாமரையால் அஷ்டோத்திர சதநாமாவளியுடன் அர்ச்சனை நடக்கும்பொழுது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எம்பெருமானை தரிசிக்கலாம்.