பத்மாவதி பரிணயோத்ஸவம்
வைகாசி மாதம் சுக்ல பக்ஷ தசமி அன்று பத்மாவதி ஸ்ரீனிவாசருக்கு பரிணயோத்ஸவம் நாளாகும். 1992 ஆம் ஆண்டு முதல் பத்மாவதி பரிணயோத்ஸவம் திருமலையில் நடைபெறுகிறது.
முதல் நாள் அதாவது வைகாசி மாதம் சுக்ல பக்ஷ நவமி அன்று மாலையில் வேங்கடஸ்வர ஸ்வாமி கஜவாகனத்திலும், ஸ்ரீதேவி, மற்றும் பூதேவி பல்லக்கிலும் ஊர்வலமாக நாராயணகிரி உத்யானவனம் எழுந்தருளி, பின்னர் பரிணயோத்ஸவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். சங்கீத கச்சேரிகள் ஆஸ்தானம் நடைப்பெற்ற பின்னர் ஸ்வாமி, உபயதேவிமார்களுடன் கோயிலுக்கு திரும்புவார்.
இரண்டாம் நாள் அதாவது வைகாசி மாதம் சுக்ல பக்ஷ தசமி அன்று பல்லக்கில் உபயநாச்சிமார்களும், குதிரை வாகனத்தில் திருமலையப்ப ஸ்வாமியும், மூன்றாம் நாள் அதாவது வைகாசி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி அன்று திருமலையப்ப ஸ்வாமி கருட வாகனத்திலும் தேவிமார்கள் பல்லக்கிலும் எழுந்தருளி நாராயணகிரி உத்யானவனத்தில் முதல் நாள் நடைபெற்ற மாதிரியே பரிணயோத்ஸவம் நிகழ்ச்சிகள் நடைபெறும். பத்மாவதி பரிணயோத்ஸவம் விழாவினை தரிசித்த பக்தர்களின் இல்லத்தில் திருமண சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக அமையும்.