உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவன் படத்துக்கு அருகில் மகான்களின் படங்களை வைத்து பூஜிக்கலாமா?

இறைவன் படத்துக்கு அருகில் மகான்களின் படங்களை வைத்து பூஜிக்கலாமா?

மகான்கள் என்பவர்கள் தெய்வமாகப் பிறவி எடுப்பவர்கள் அல்ல. இவ்வுலகில் மற்ற மனிதர்களைப்போலவே மகான்கள் என்பவர்களும் சாதாரண மனிதராகவே பிறந்து, தனது தூய்மையான வாழ்க்கையாலும் புலனடக்கம் போன்ற சிற்சில கட்டுப்பாடுகளாலும், கடுமையான தவம், தியானம், யோகம், ஆத்ம சிந்தனை போன்ற செயல்களாலும் மனித சக்தியை அதிகரித்து தெய்வீக ஆற்றலைப் பெற்றவர்கள் ஆகவே, மகான்களும் மனித வர்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

குறிப்பாகச் சொல்வதென்றால் ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது கள்ளம் கபடம் அற்றதாக தூய மனிதராகவே (மகானாகவே) பிறக்கிறது. நாளடைவில் (தீய) சேர்க்கையாலும், ஆசை, காமம், கோபம், அகங்காரம், முதலியவற்றாலும் மகானின் ஆற்றலை இழந்து, சாதாரண மனிதனாக மாறி விடுகிறது. ஆனால் ஒரு சில மனிதர்கள் மட்டும் அந்த (மகான்களுக்குரிய) ஆற்றலை புலனடக்கம் போன்ற சில கட்டுப்பாடுகளால் தக்க வைத்துக் கொண்டு, அந்த மனித ஆற்றலை நாளடைவில் அதிகரித்துக் கொள்ளவும் செய்கிறார்கள்.

இறைவன் என்பவர் சாதாரான மனிதனைக் காட்டிலும் பல வகையில் மேம்பட்டவர். ஒருக்காலும் மனிதனும் தெய்வமும் ஒன்றாக முடியாது. தெய்வத்தையும் மகான்களையும் ஒன்றாக, ஒரே விதமாகக் கூற முடியாது. வழிபாட்டு முறைகளும் தெய்வத்துக்கும், ஞானிகளுக்கும், மகான்களுக்கும் தனித்தனியே உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே தெய்வத்தின் படம், விக்ரகங்கள் போன்றவற்றுடன் ஒன்றாகச் சேர்த்து ஒரே வரிசையில் சமமாக மகான்களின் சிலை, படம், விக்ரகங்களை வைத்து பூஜிப்பதை சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. ஆகவே, மகான்கள் (ஞானிகள்) படத்தையும் தெய்வ படத்தையும் சற்று (உயரம் -தாழ்வு போன்ற) ஏற்றத்தாழ்வுடனோ அல்லது வெவ்வேறு இடங்களிலோ வைத்து பூஜிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !