உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமி பூஜை

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் காலபைரவாஷ்டமி பூஜை

சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், கால பைரவாஷ்டமியொட்டி, நேற்று, சிறப்பு யாக பூஜை நடந்தது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், கால பைரவர் வழிபாட்டுக்குழு சார்பில், நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி, காயத்ரி, ருத்ர உள்ளிட்ட சிறப்பு ?ஹாமங்கள் நடந்தன. 10:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை, 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. மாலையில், தேய்பிறை அஷ்டமியொட்டி, கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதேபோல், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், காலபைரவர் சன்னதி முன், நேற்று, 108 மூலிகைகள் கொண்டு, சிறப்பு மகா ருத்ர யாகம் நடந்தது. கால பைரவருக்கு, பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் என, 16 வகை பொருட்களால், சிறப்பு அபி?ஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.

* ஆத்தூர், வசிஷ்ட நதி தென்கரையில் உள்ள கைலாசநாதர் கோவிலில், நேற்று, கால பைரவாஷ்டமி யொட்டி, உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. பிரித்தியங்கிரா தேவி அம்மன், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !