உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.40 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு!

ரூ.40 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு!

சென்னை: மணப்பாக்கம், வள்ளீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 40 கோடி ரூபாய் மதிப்பிலான இடம், நேற்று மீட்கப்பட்டது. மணப்பாக்கம், வள்ளீஸ்வரர் கோவில், இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 3.24 ஏக்கர் விவசாய நிலம், கோவில் எதிரே உள்ளது. அந்த இடம், 30 ஆண்டுகளுக்கு முன், அண்ணா நகரைச் சேர்ந்த மோகனுக்கு,  குத்தகைக்கு வழங்கப்பட்டது.

மறு வாடகை: மணப்பாக்கம் பகுதியில், நெல், வாழை உள்ளிட்ட விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது. மோகன், கோவில் இடத்தில், வணிக பயன்பாட்டுக்கு மறு வாடகைக்கு விட்டிருந்தார். இதன் மூலம், மாதந்தோறும், லட்சக் கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளார். இந்து அறநிலையத் துறையின் உத்தரவை மீறி, கோவில் இடத்தை பயன்படுத்தியதால், இடத்தை, கோவில் வசம் ஒப்படைக்க, ‘நோட்டீஸ்’ வழங்கப்பட்டது. அந்த உத்தரவை, மோகன் பொருட்படுத்தாமல் இருந்தார்.

‘சீல்’: இதையடுத்து, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர், சிவாஜி உத்தரவின் பேரில், 40 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் இடம், போலீஸ் பாதுகாப்புடன், நேற்று மீட்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி முன்னிலையில், அறநிலையத் துறை ஆய்வாளர் பூங்கொடி, அந்த இடத்திற்கு பூட்டு போட்டு, ‘சீல்’ வைத்தார். சாவி, வள்ளீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது. அசம்பாவிதம் நடைபெறாத வகையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !