உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் விடுதி அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

பக்தர்கள் விடுதி அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் தங்கும் அறை உள்ளதாக அறிவிப்பு பலகை வைக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திப்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பல்லவர் கால பழமையுடன், சமயகுரவர்களால் பாடல் பெற்ற தலமாக இது விளங்குகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் மற்றும் விழாக்காலங்களில் தென் மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்காக திருக்கழுக்குன்றம், நால்வர் கோவில் பேட்டையில் பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளது. இருப்பினும், வெளியூர் வாழ் பக்தர்களுக்கு கோவில் நிர்வாக தங்கும் விடுதி இருப்பது தெரிவதில்லை. எனவே, தங்கும் விடுதி உள்ளதாக அறிவிப்பு பலகை வைப்பது, பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !