முதல்வர் நலம் வேண்டி மீண்டும் கோவிலில் பூஜை
ADDED :3283 days ago
கரூர்: முதல்வர் ஜெயலலிதா நலம்பெற, அ.தி.மு.க.,வினர், மீண்டும் நேற்று கரூரில் பூஜையை துவக்கினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம், அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதனால், முதல்வர் விரைவில் வீடுதிரும்ப, மாநிலம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், சிறப்பு யாகம் நடத்த, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டது. அதன்படி, கரூரில், கல்யாண பசுபதீஸ்வரா கோவிலில் நேற்று காலை, 11:00 மணிக்கு, சிறப்பு யாகம் நடந்தது. இதில், போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில்பாலாஜி, மாவட்ட அவைத்தலைவர் காளி யப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.