திருப்பூர் ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன்கோவில் மண்டல பூஜை, ஆறாட்டு விழா, பெருமாள் கோவிலில் இன்று நடக்கிறது; இன்று மாலை, புதிய ரதத்தில் சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா நடைபெறவுள்ளது. காலேஜ் ரோடு, ஸ்ரீ ஐயப்பன் கோவில், 57ம் ஆண்டு மண்டல பூஜை விழா, கடந்த, 16ல் துவங்கியது. கொடியேற்றம், 108 சங்காபிஷேகம், பகவதி சேவை, நவ கலச அபிஷேகம் என, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி ஆறாட்டு விழா மற்றும் ஊர்வலம் இன்று நடைபெறுகிறது. வழக்கமாக சுவாமி ஆறாட்டு உற்சவம், பவானி கூடுதுறையில் நடைபெற்று வந்தது. இந்தாண்டு, ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில், இவ்வைபம் நடக்கிறது. கங்கை, யமுனா, காவிரி நதிகளின் தீர்த்தம், வெட்டி வேர், பன்னீர், பச்சைக்கற்பூரம் உள்ள மூலிகைகள், குளத்தில் கலக்கப்பட்டு, சுவாமி ஆறாட்டு உற்சவம், சபரிமலை பிரதம தந்திரி மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், 2 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆறாட்டு முடிந்ததும், குஜராத்தி திருமண மண்டபத்தில், அன்னதானம் நடக்கிறது. இந்த உற்சவத்தை தொடர்ந்து, சி றப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன், யானை மீது எழுந்தருளி திருவீதி உலா நடப்பது வழக்கம். இம்முறை, புதிய ரதத்தில் சுவாமி எழுந்தருளுகி றார். மாலை, 6:00 மணிக்கு, பஞ்ச வாத்தியங்கள், வாண வேடிக்கை முழங்க, ஈஸ்வரன் கோவிலில் இருந்து, சுவாமி ஊர்வலம் துவங்குகிறது. நொய் யல் பாலம், கோர்ட் வீதி, மேம்பாலம் என முக்கிய ரோடுகள் வழியாக சென்று, ஐயப்பன் கோவிலை அடைகிறது.