சுப்ரமணிய சுவாமி கோவிலில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு பயணம்!
ADDED :3283 days ago
ஆர்.கே.பேட்டை: மண்டல விரதம் முடிந்து, அய்யப்ப பக்தர்கள் இன்று இரவு சபரிமலைக்கு புறப்படுகின்றனர். இரவு, 7:00 மணிக்கு இருமுடிகட்டு கட்டுகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார் குப்பம் சுப்ரமணிய சுவாமி கோவிலில், அய்யப்ப பக்தர்கள், மண்டல பூஜை நடத்தி வருகின்றனர். துளசி மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், இன்று இரவு, சபரி மலைக்கு பயணம் மேற்கொள்கின்றனர். 48 நாட்களாக தினசரி அய்யப்ப சுவமிக்கு படி பூஜை மற்றும் ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது. மண்டல விரதத்தை முடிந்து, இன்று, இரவு 8:00 மணிக்கு, இருமுடி கட்டி, சபரி மலைக்கு தங்களின் பயணத்தை துவக்குகின்றனர். நேற்று முன்தினம் நடந்த படி பூஜையில், சபரிகிரி வாசன் மற்றும் குருவாயூரப்பனுக்கு சிறப்பு உற்சவம் நடந்தது.