முதல்வர் ஜெ., பூரண குணமடைய எம்.எல்.ஏ., தலைமையில் பூஜை
உளுந்துார்பேட்டை: முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி, உளுந்துார்பேட்டை ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில், விளக்கு பூஜை நடந்தது. உளுந்துார்பேட்டை ஸ்ரீகனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெரு மாள் கோவிலில் நடந்த விளக்கு பூஜையை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கினார். ஒன்றிய செயலாளர் மணிராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம், நகர செயலா ளர் துரை, முன்னாள் ஒன்றிய துணை சேர் மன் சாய்ராம், மாவட்ட இளைஞரணி செயலா ளர் கிருஷ்ணன், பொதுக் குழு உறுப்பினர் வளர்மதி பாண்டியராஜன், பேரவை ஒன்றிய இணை செயலாளர் சம்பத்ஐயர், அமைப்புசாரா இணை செயலாளர் வேங்கையன், இலக்கிய அணி அன்பழகன், கண்ணன், பேரவை செயலாளர் பக்கிரிசாமி, நகர இளைஞரணி ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாலதிராமலிங்கம், சியாமளாபிரதீப்ராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், கோவிந்தன், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் மணிராஜ், நகர துணை செயலாளர் கஜேந்திரன், நிர்வாகிகள் சாமிதுரை, கேண்டர்ராஜா, தனசேகரன், சேவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.