உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாலய திறப்பு விழா: இலவச வீடுகளுக்கு சாவி

தேவாலய திறப்பு விழா: இலவச வீடுகளுக்கு சாவி

பந்தலுார்: பந்தலுார் அருகே, உப்பட்டியில் நடந்த தேவாலாய திறப்பு விழாவில், சிறப்பு திருப்பலி நடந்தது. பந்தலுார் அருகே  உப்பட்டியில் கடந்த, 1959ல் இருந்து, பத்தேரி மறைமாவட்டத்தின் கீழ், புனித ஜார்ஜ் மலங்கர கத்தோலிக்க தேவாலாயம் செயல்பட்டு  வருகிறது. பழமையான இந்த கட்டடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துவக்கப்பட்டது. இந்த பணிகள் முடிந்து,  புனரமைப்புக்கான திறப்பு விழா, நேற்று நடந்தது. பங்குதந்தை செபாஸ்டியான் வரவேற்றார். விழாவுக்கு வந்த, உயர் பேராயருக்கு  வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு,‘ஒன்பதாம் மணி’ வழிபாடு நடந்தது. பத்தேரி மறைமாவட்ட பேராயர் ஜோசப்மார்தோமஸ் பேசினார்.  மதியம், 2:30 மணிக்கு தேவாலாய அர்ச்சிப்பும், திரு தைலத்தால் புனிதப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, உயர் பேராயர் கிளீம்ஸ்  காதோலிக்க பாவா மற்றும் ஆயர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.   பின், ராமநாதபுரம் மறை மாவட்ட ஆயர் மார்போல்  அருளுரை வழங்கினார். மாவேலிக்கர மறைமாவட்ட ஆயர் ஜோஸ்வா மார் இக்னேசியஸ் சிறப்புரை நிகழ்த்தினார். தேவாலாயம் சார்பில்  வீடில்லாத ஏழைகள் இருவருக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, அதற்கான சாவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை  வழிபாடு, கூட்டு திருப்பலி,  முன்னாள் பங்கு தந்தைகளை கவுரவித்தல் நிகழ்ச்சிகள், ஆராதனை நடத்தப்படுகிறது.  ஏற்பாடுகளை கமிட்டி  நிர்வாகிகள் மத்தாய், கீவர்கீஸ், ஜோஸ், எல்தோ, தோமஸ், ஜோய் ஆகியோர் செய்திருந்தனர். செயலாளர் மத்தாய் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !