உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம்சுரத்குமார் மகராஜ் 98வது ஜெயந்தி விழா

யோகி ராம்சுரத்குமார் மகராஜ் 98வது ஜெயந்தி விழா

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 98ம் ஆண்டு ஜெயந்தி விழா, வரும் 30ல் துவங்கி இரு நாட்கள், ஆசிரம வளாகத்தில் நடக்கிறது. விழாவின் துவக்கமாக, 30 காலை, 6:30 மணிக்கு, பிரதான் மந்திரில் ஹோமம் நடக்கிறது. இதன்பின், நடக்கும் நிகழ்ச்சிகளின் விபரம்:l    10:30  பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்கள்; பக்தர்கள் விளக்கம் l    மாலை 4:30  சற்குருநாத ஓதுவாரின் தேவாரம்l    6:15 அனுராதா கிருஷ்ண மூர்த்தியின் இன்னிசை கச்சேரி l    டிச., 1 காலை 7:00 மணி  பிரதான் மந்திரில் சிறப்பு அபிஷேகம், சுவாதி ஹோமம், அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை 10:00  நுால் வெளியீடு, 11:00 பஜனை l    மாலை 4:30  ராமன்சங்கர் குழுவினரின் பக்தி இசை இரவு 7:45 வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா. விழா ஏற்பாடுகளை ஆசிரம தலைவர், ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !