கார்த்திகை மாத சோம வார விழா தம்புரானுக்கு சங்கு அபிஷேகம்!
ADDED :3283 days ago
கோவை : கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு, தம்புரானுக்கு, 108 சங்கு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. கோவை, சிட்ரா, கோல்டுவின்ஸ், துரைசாமி நகரில் சுயம்பு தம்புரான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், கார்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு, முதல் திங்கட்கிழமை தினத்தில், தம்புரானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 108 சங்குகளால் அபிஷேக பூஜை நடந்தது. அடுத்து வரும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளிலும், சங்கு அபிஷேகம், அன்ன அபிஷேகம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளன. மாத இறுதியில், வேள்வி வளர்த்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட உள்ளன. நிகழ்ச்சியில், துரைசாமி நகர், ராமலட்சுமி நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சோம வாரத்தை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.