உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருவீதி உலா

திருப்பூர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருவீதி உலா

திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ ஐயப்பன் கோவில், மண்டல பூஜை விழாவில் நேற்று, காலை ஆறாட்டு உற்சவம் நடந்தது. மாலை சுவாமி ஊர்வலம் நடந்தது. புதிய ரதம் செய்யப்பட்டு, பூக்கள் மற்றும் மாலைகளால் ரதம் அலங்கரிக்கப்பட்டு, ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி ஐயப்பன் எழுந்தருளினார். கேரள கலைஞர்கள் தையம், பஞ்ச வாத்தியங்கள் முழங்க, சுவாமி ஊர்வலம் நடந்தது. ஈஸ்வரன் கோவிலில் துவங்கிய ஊர்வலம், நொய்யல் பாலம், குமரன் ரோடு, டவுன் ஹால் வழியாக சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !