மதுரை முருகன் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :3282 days ago
மதுரை, மதுரை மாநகராட்சி பூங்கா முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கமிஷனர் சந்தீப் நந்துாரி தலைமையில் நடந்தது. மொத்தம் 3 லட்சத்து 61 ஆயிரத்து 437 ரூபாய் வருவாயாக கிடைத்தது. இப்பணியில் சமூகவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா, உதவி கமிஷனர் (வருவாய்) ரங்கராஜன், கணக்கு அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.