ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியலில் ரூ.13 லட்சம் காணிக்கை
ADDED :3348 days ago
திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே, ஆவணியாபுரம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் உண்டியலில், 13 லட்சத்து, 7,588 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. கோவில் உதவி ஆணையர் மோகனசுந்தரம், ஆய்வாளர் மனோகரன், செயல் அலுவலர் உமேஷ்குமார், கணக்காளர் திவாகர் முன்னிலையில், நேற்று கோவிலில் உள்ள, ஆறு உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் காணிக்கையாக, 13 லட்சத்து, 7,588 ரூபாயும், 119 கிராம் தங்கம், 41 கிராம் வெள்ளியும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.