சபரிமலை காட்சிகள் காண இணையதளம்!
ADDED :3285 days ago
சபரிமலை: சபரிமலை காட்சிகளை நேரடியாக காண இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. சபரிமலையில், நடை திறந்து எட்டு நாட்களில் வருமானம், 22.66 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், 19.95 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. சபரிமலை காட்சிகளை, நேரடியாக காண, www.sabarimala.tdb.org.in என்ற இணையதளத்தை தேவசம்போர்டு தலைவர் நேற்று தொடங்கி வைத்தார். sabarimala official என்ற பெயரில் டுவிட்டர், முகநுால் கணக்கும் தொடங்கப்பட்டுஉள்ளது.