உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக்கிழமை சிறப்பு உற்சவம் கோவில்களில் கோலாகலம்

வெள்ளிக்கிழமை சிறப்பு உற்சவம் கோவில்களில் கோலாகலம்

ஆர்.கே.பே ட்டை: வெள்ளிக்கிழமையை ஒட்டி, எல்லையம்மன் கோவிலில், நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். ஆர். கே. பேட்டை அடுத்த, அஸ்வரேவந்தாபுரம் திருகாவேரி குளக்கரையில் அமைந்துள்ளது, எல்லையம்மன் கோவில். இந்த கோவிலில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து வருகிறது. நேற்று காலை, 10:30 மணிக்கு, மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டனர். இதே போல், அம்மையார் குப்பம் காமாட்சியம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவில்களிலும், நேற்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !