உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெருசலேம் புனித பயணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

ஜெருசலேம் புனித பயணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: அரசு உதவியுடன், ஜெருசலேம் புனித பயணம் செல்ல விரும்புவோர், டிச., 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஜெருசலேம் புனித பயணம் செல்ல, தமிழக அரசு, ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கிறது. அதற்கு மேலாகும் தொகையை, பயணம் செய்வோர் ஏற்க வேண்டும். இப்பயணம், 2017 பிப்., முதல் மார்ச் வரை மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு உதவி பெற விரும்புவோர், மேலாண் இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, ஐந்தாவது தளம், அண்ணா சாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு, டிச., 16க்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விரிவான விபரங்களை, www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !