ஐயப்பன் கோவில் மண்டல பூஜை விழா
ADDED :3269 days ago
ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு - ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜனசங்கம். அன்னதானம், லுமுற்பகல், 11:00 மணி முதல். கார்த்திகை மாதம் பிறந்தாலே, ஐயப்ப சுவாமியின் பக்தி மணம் கமழ துவங்கி விடுகிறது; சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமியை தரிசிக்க, கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதமிருக்கும் பக்தர்கள், இறை வழிப்பாட்டில் ஈடுபடுகின்றனர். அத்தகைய பக்தர்களுக்காக, திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், வாரந்தோறும் ஞாயிறு தினங்களில், காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இரண்டாவது ஞாயிறு தினமான இன்றும், அன்னதானம் நடைபெறுகிறது.