உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பெருமாளும் காஞ்சி வரதரும் ஒரு இடத்தில்

திருப்பதி பெருமாளும் காஞ்சி வரதரும் ஒரு இடத்தில்

காஞ்சிபுரம்: அய்யங்கார்குளம் சஞ்சீவராயர் கோவில் குளக்கரையில், திருப்பதி வெங்கடாசலபதி, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள், ஸ்ரீரங்கநாதர் ஆகிய சுவாமி சிலைகள், ஒரே இடத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இதன் வரலாறு தெரியாமல், இங்கு வரும் மக்கள் காட்சிப்பொருளாக பார்த்து செல்கின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் கிராமத்தில், 14ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட சஞ்சீவராயர் கோவில் உள்ளது. இந்த கோவில் எதிரில், 133 ஏக்கர் பரப்பில் தாதசமுத்திரம் என்ற குளமும் அமைந்துள்ளது. இந்த குளத்தை பாதுகாக்க, பெரிய கற்களால்கரை அமைக்கப்பட்டுள்ளது. குளம் நிரம்பினால் ஏரி போல் காணப்படும் என, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். இந்த குளக்கரையில் உள்ள கல்லில், பல நுாற்றாண்டுகளுக்கு முன் செதுக்கப்பட்டுள்ள அற்புதமான சிற்பங்கள் காண்போரை வியக்க வைக்கின்றன.இந்த சிற்பங்களில் சில சிதிலம் அடைந்துள்ளன; மற்றவை நன்கு உள்ளன. இந்த சிற்பங்கள் ஏற்கனவே செதுக்கப்பட்டு இந்த குளக்கரையில் வைக்கப்பட்டுள்ளதா அல்லது கரைக்கு பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ள கல்லில் செதுக்கப்பட்டுள்ளதா என, தெரியவில்லை.

வித்தியாசமான சிற்பம்: பாற்கடலில் அமுதம் கடையும் போது, மந்திர மலைய ைமத்தாக வும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் பயன்படுத்தினர். ஒரு புறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் இருப்பர். மந்திர மலை கடலில் மூழ்க துவங்கியதும் பெருமாள் ஆமை அவதாரம் எடுத்து, மலையைதாங்கி பிடித்ததாக புராணம் கூறுகிறது. இந்த சிற்பத்தில் பெருமாள் அருகில் சிவபெருமான், மறுபுறம் ஆஞ்சனேயர் , பிரம்மா போன்ற சிலைகள் இதில் காணப்படுகின்றன.

அற்புதங்களின் தோற்றம்: குளக்கரையில், மகாலட்சுமி, நடன கோலத்தில் கண்ணன், வெண்ணெய் சாப்பிடும் கண்ணன், கோவர்த்தன கிரி மலையை தாங்கி பிடிக்கும் கிருஷ்ணன், திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள், காஞ்சி வரதராஜப்பெருமாள், பாற்கடலில் அமுதம் கடைதலில் சிவன், பெருமாள், பிரம்மா, ஆஞ்சனேயர் , ஒன்றாக இருக்கும் காட்சி, ஸ்ரீரங்கநாதர் ,ஆலிலை கிருஷ்ணர், வெண்ணெய் தின்னும் கண்ணன், போன்ற சிற்பங்கள் அழகாக காட்சியளிக்கின்றன.

கல்லில் வடிக்கப்பட்ட சாப்பாடு தட்டு: இந்த பகுதியில், சிற்பிகள் தங்கி வேலைகள் செய்திருக்கலாம், அவர்கள் சாப்பிடுவதற்காக கல்லில் சாப்பாடு தட்டு வடிவில் செ துக்கப்பட்டுள்ளது. அதை சுத்தம் செய்வதற்காக , தண்ணீர் செல்ல வழியும் அருகில் பொரியல் வைப்பதற்காக , சிறு பள்ளமும் அந்த கல்லில் செ துக்கப்பட்டிருக்கலாம் என, அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். இந்த பகுதியில் உள்ள சிற்பங்கள் குறித்து முழுமையான ஆராய்ச்சியாரும் செய்து வெளியிடவில்லை என்பதால், இதன் வரலாறு முழுமையாக அறிய முடியாமல் இருக்கிறது. சில இடங்களில் கல் வெட்டுகளும் உள்ளன; அதில் சில தகவல ்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கேரளாவிற்கு சென்ற மகாலட்சுமி: இந்த பகுதியில், மகாலட்சுமி கோவில் இருந்ததாகவும், நுாறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வசித்த பலர் கேரள மாநிலம் பள்ளிபுரம் பகுதியில் குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் குடிகொண்டிருந்த மகாலட்சுமி, முதலை வடிவம் எடுத்து அருகில் உள்ள ஆறு வழியாக, பள்ளிபுரம் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து மகாலட்சுமி வந்ததால் அங்குள்ள கோவிலுக்கு காஞ்சிபுரம் மகாலட்சுமி கோவில் என்ற பெய ரில் அந்த பகுதி மக்கள் தற்போதும் வழிபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் மகாலட்சுமி சிலை இருந்ததற்கா ன மகாலட்சுமி உருவம் பெ ாறிக்கப்பட்ட வளை வு இன்னும் இங்கு உள்ளது. அதற்கு, பூஜையும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !