திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: சுவாமி வீதி உலா
ADDED :3265 days ago
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ,கார்த்திகை தீப திருவிழா, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தீப விழா மூன்றாம் நாள் இரவு சுவாமி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.