காஞ்சியிலிருந்து திருப்பதிக்கு குடை பாதயாத்திரை பக்தர்கள் ஏற்பாடு
ADDED :5126 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதிக்கு குடை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது.காஞ்சிபுரம் வெங்கடேசப் பாளையம் பகுதியிலிருந்து, ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், திருப்பதிக்கு பாதயாத்திரை செல்கினறனர். இந்த வருடம் திருப்பதிக்கு அலங்காரக் குடை கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இரண்டு அலங்காரக் குடைகள் தயார் செய்தனர். அவற்றை நேற்றுமுன்தினம் அலங்கரித்து, மேளதாளத்துடன் திருப்பதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். குடையுடன் 70 பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.