உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலக்கோயில்பட்டியில் சவேரியார் அன்னதான விழா

மேலக்கோயில்பட்டியில் சவேரியார் அன்னதான விழா

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே மேலக்கோயில்பட்டியில் சவேரியார் அன்னதான விழா நடந்தது. வட்டார பாதிரியார் சேவியர் கொடியேற்றினார். தேசம் காக்கும் ராணுவ வீரர்கள் நலனுக்காகவும், விவசாயம் செழிக்கவும் அன்னதான திருவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி முதல்வர் ரெக்ஸ்பீட்டர் தலைமை வகித்தார். பெருமாள்மலை பாதிரியார் லுாயிஸ் முன்னிலையில் சப்பர பவனி நடந்தது. முன்னாள் ஊராட்சி தலைவர் பிச்சை சார்பில் மின் அலங்கார சப்பர பவனி நடந்தது. விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. உதவி பாதிரியார் லாரன்ஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !