காளியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி
ADDED :3268 days ago
வத்தலக்குண்டு: பழையவத்தலக்குண்டு காளியம்மன் கோயில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து வழிபட்டனர்.பட்டாளம்மன்கோயில் தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் 3 நாள் திருவிழா நடந்தது. முதல் நாளில் அம்மனின் கரகம் பூஞ்சோலையிலிருந்து எடுத்து வரப்பட்டது. அன்று பொங்கல் வைத்து அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். 2ம் நாளில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 3ம் நாளில் பெண்கள் முளைப்பாரியுடன் அம்மன் ஊர்வலம் சென்று பூஞ்சோலை சென்றடைந்தார். வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.