திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு ஒர் வேண்டுகோள்
திருவண்ணாமலை சிவனடியார்கள் சபை பக்தர்களுக்கு ஒர் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது, தீபமேற்றுவோர் மட்டுமே ஏற வேண்டும்.
அவ்வாறு தீபமேற்ற செல்வோர் விரதத்தை அனுஷ்டித்திருக்க வேண்டும். ஆர்வம் காரணமாக எல்லாரும் அதில் ஏறக்கூடாது. திருவண்ணாமலை சிவனின் வடிவமாக இருக்கிறது. அதன் மீது ஏறினால், சிவனையே மிதிப்பதற்கு ஒப்பாகும். இது மகாபாவமும் ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமே கிடையாது. இந்த மலை அக்னி வடிவம் என்பதை இப்போதும் உணரமுடியும். ஏனெனில், எவ்வளவு மழை பெய்தாலும், மலையில் இருந்து சொட்டு தண்ணீர் கூட கீழே வடியாது. சிவபெருமான் அக்னியைத் தன் நெற்றிக் கண்ணாகக் கொண்டுள்ளார். ஏனவே, தயவு செய்து மலையில் மீது ஏற வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் தங்களின் திருவடியை வணங்கி கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.