பழநி உண்டியலில் ரூ.74.69 லட்சம் வசூல்
ADDED :3268 days ago
பழநி: சபரிமலை சீசன்காரணமாக பழநி மலைக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
கடந்த நவ., 28க்கு பின் டிச.,9 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் தங்கம் 775கிராம், வெள்ளி 2,400 கிராம், வெளிநாட்டு கரன்சி 2,734ம், ரொக்கமாக ரூ. 74 லட்சத்து 69 ஆயிரத்து 964 கிடைத்துள்ளது. இதில் தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், உருவம், உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.