வெம்பக்கோட்டை சந்தான கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்
வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை அருகே பேர்நாயக்கன்பட்டி இந்து கம்மவார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சந்தான கிருஷ்ணன் கோயில் மஹா கும்பாபிஷேகம் டிச.,9 காலை 8 மணிக்கு நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கோஷ்டியூர் உ.வே.மாதவன் ஸ்வாமிகள், மாவட்ட நீதிபதி வசந்தி தலைமை வகித்தனர். சிவகாசி குற்றவியல் நீதிபதி சந்தானகுமார், சார்பு நீதிபதி ஹேமா முன்னிலை வகித்தனர். ஸ்ரீவில்லிப்புத்துார், திருத்தங்கல் திவ்யதேச அர்ச்சகர் வி.அனந்தசயன பட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தினார். ஜெய்பாலாஜி ஸ்பார்க்லர்ஸ் ஆர்.வெங்கிடசாமி, தனலட்சுமி, விக்னேஷ்வயர்ஸ் அன் வித்யா ஏஜென்ஸி எஸ்.விஜயகுமார், கிரகலட்சுமி, ஸ்ரீ பாலமுருகன் மேச் ஒர்க்ஸ் ஜி.ராஜேந்திரன், ராஜலட்சுமி, ஓய்வு டி.இ.ஓ., எல்.பொன்னுசாமி, நாகஜோதி, வி.பி.எஸ்.பார்க்கலர்ஸ் பி.சுப்புராஜ், பி.கணேஷ்குமார், ரக்ஸனா கே.ஆர்.கண்ணன், சுந்தரவள்ளி, அனந்தா எலக்ட்ரிக்கல்ஸ் வி.அழகர்சாமி,லதா, ஜி.சிவராணி, ஜி.ஸ்ரீநிதி, வெம்பக்கோட்டை ஜெ., பேரவை ஆர்.முத்துகிருஷ்ணன், மகாலட்சுமி,பி.பி.பி.அசோசியேட்ஸ் வி.பொன்ராஜ், பிரியா, கோபிபார்க்லர்ஸ் ஜி.கேசவநாராயணன், ஜெயா, பி.ராமானுஜம், அய்யம்மாள், ஸ்ரீராஜலட்சுமி எஸ்.வி.சங்கரநாராயணன், வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க.,பொருளாளர் எ.வெங்கடேசன், வெங்கடேஸ்வரா பேக்கேஜிங் ஜி.தாமோதரன், நளன் டெய்லி பிரஷ்பொன்ராஜ், ஹயக்கீரிவாஸ் பள்ளி தலைவர் வெங்கடேஷ்பிரசாத், தாளாளர் ஜெயக்குமார், சல்வார்பட்டி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லுாரி இயக்குனர்கள், மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேர்நாயக்கன்பட்டி இந்து கம்மவார் சமுதாய நிர்வாகிகள், விழா கமிட்டியார்கள் ராமானுஜம், பொன்னுசாமி, அழகர்சாமி, முத்துகிருஷ்ணன், கண்ணன் செய்திருந்தனர்.