உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னதான திட்டம்: பக்தர்கள் வலியுறுத்தல்

அன்னதான திட்டம்: பக்தர்கள் வலியுறுத்தல்

பெ.நா.பாளையம்: சாம்பமூர்த்திஸ்வரர் கோவிலில், அன்னதான திட்டம் துவக்க, பக்தர்கள் வலியுறுத்தினர். பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா, ஏத்தாப்பூர், சாம்பமூர்த்திஸ்வரர் கோவிலில், பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் நடக்கும் பூஜையில் பங்கேற்க, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அங்கு வருவோர் நலன் கருதி, அன்னதான திட்டம் துவக்க, அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !