இளையான்குடி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3269 days ago
இளையான்குடி: கண்ணமங்கலம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேக பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 4:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, டிச.,9 அதிகாலை 5:30மணிக்கு 2ம் காலயாகசாலை பூஜைக்கு பின் காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.