பழநிகோயிலில் கூடுதல் தகவல் பலகைகள்
பழநி: பழநி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாறுவதை தவிர்க்க வெளிப்பிரகாரத்தில் கூடுதலாக தகவல்பலகைகள் வைக்கும் பணி நடக்கிறது. தமிழகத்தின் முதன்மை ஆன்மிக தலமான பழநிமலைக்கோயில் ஞான தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய விழாக் காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது சபரிமலை சீசனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யுவும், காலபூஜை விபரம், தரிசன கட்டணம், பொது தரிசன கட்டண வழி, தங்கரத புறப்பாடு நிலைகள், இஉண்டியல், அன்னதான கூடம் உள்ளிட்ட சேவைகள், அவை இருக்கும் இடங்களை எளிதாக பக்தர்கள் தெரிந்து கொள்ள தகவல் பலகைகள் வைக்கின்றனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரம் ரோப்கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷன்வழிகள், அன்னதானகூடம் உள்ளிட்ட இடங்களில் புதிய தகவல் பலகைகள் வைக்கும்பணி நடக்கிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“அடிவாரம் பாதவிநாயகர்கோயில், வெளிப்பிரகாரத்தில் டிஜிட்டல் போர்டுகள் வைத்துள்ளோம். விரைவில் தைப்பூசவிழா வரஉள்ளதால் பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதலாக தகவல் பலகைகள் வைக்கப்படுகிறது,” என்றார்.