உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தேவாலயத்தில் சிறப்பு தியானம்

கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் தேவாலயத்தில் சிறப்பு தியானம்

குன்னுார்: அருவங்காடு தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவது குறித்த சிறப்பு தியானம், டிச.,9 துவங்கியது.

கிறிஸ்தவர்களின் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா, வரும், 25ல் கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பான முறையில் கொண்டாடுவது குறித்த தயாரிப்பு தியானம், அருவங்காடு பாய்ஸ்கம்பெனி துாய ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், நேற்று மாலை துவங்கியது. தியானத்தின் முக்கிய நாளான டிச.,10, காலை, 9:30 மணி முதல், 12:30 மணி வரை ஆற்றுப்படுத்துதலும், 3:00 மணிக்கு இறை இரக்கத்தின் ஜெபமாலையும், 3:00 மணி முதல், 5:00 மணி வரை, ஒப்புரவு அருட்சாதனம், 5:30 மணிக்கு மறையுரை, தொடர்ந்து திருப்பலி நடத்தப்படுகிறது. டிச.,11, காலை, 7:00 மணிக்கு திருப்பலி, 9:00 மணிக்கு ஜெபமாலை, 9:30 மணிக்கு இறைப்புகழ் மாலை, 10:00 மணி துவங்கி மதியம், 2:00 மணி வரை மறையுரை ஆகியவை நடத்தப்படுகிறது. இத்தியானத்தை, கோவையைச் சேர்ந்த அருட்பணியாளர்
பெர்னாட்ஷா முன்னின்று நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !