உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் ஐயப்பன் கோயிலில் 18 படி பூஜை

திண்டுக்கல் ஐயப்பன் கோயிலில் 18 படி பூஜை

திண்டுக்கல்:திண்டுக்கல் வட்டார ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் மலையடிவாரம் ஐயப்பன் கோயிலில் 18 படிகள் பூஜை, புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பதினெட்டு படிகளுக்கு பூஜை, 15 வகையிலான பூக்களால் புஷ்பாஞ்சலி பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்க தலைவர் லட்சுமணன், செயலாளர் சந்தான கிருஷ்ணன், பொருளாளர் ரவீந்திரன் மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !