வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு சங்காபிேஷக விழா
ADDED :3254 days ago
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, காசிவிஸ்வநாதருக்கு இந்த ஆண்டு முதல் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமையும், 108 சங்காபிேஷகம் நடைபெறுகிறது. நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கிய சங்காபிேஷக விழாவில் காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. பின்னர், 108 சங்காபிேஷகமும், சிறப்பு ேஹாமமும் இடம்பெற்றன.