காஞ்சி திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்: சுவாமி வீதிவுலா
ADDED :3257 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பெரிய தெரு, திரவுபதியம்மன் கோவிலில் நேற்று, திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள, பாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வசந்த உற்சவம் நடைபெறும். தற்போது, கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் நேற்று திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு, காலை, அர்ச்சுனன் - திரவுபதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இரவு, மலர் அலங்காரத்தில் சுவாமி வீதிவுலா நடைபெற்றது.