உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில் புது சிலையா? பக்தர்கள் அதிர்ச்சி

வாழைத் தோட்டத்து அய்யன் கோவிலில் புது சிலையா? பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பூர் : வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ள அய்யன் உருவ சிலையை மாற்றம் செய்வதாக பரவிய தகவல் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அய்யம்பாளையத்தில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது.ஸ்தல விருட்சத்தின் கீழ் அய்யன் சிலை மற்றும் சிவலிங்கம் ஆகியன உள்ளது. கோவிலில் சில நாள் முன், சுமார் ஐந்தடி உயரத்தில் அய்யன் புதிய சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டது. அச்சிலை, கோவில் கர்ப்பகிரகத்தில் உள்ள பழைய சிலைகளை அகற்றி விட்டு புதிதாக இச்சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து, கோவில் உதவி ஆணையர் செல்வம் கூறுகையில், கோவிலில் உள்ள எந்த சிலைகளும் மாற்றம் செய்யப்படாது. பக்தர்கள் எந்த சந்தேகமும் பட வேண்டாம். இங்குள்ள அய்யன் சிலை, பக்தர் ஒருவர் நேர்த்தி கடனுக்காக செய்து கொண்டு வந்து வைத்துள்ளார். மற்றபடி எந்த சிலை யும் மாற்றும் திட்டம் எதுவுமில்லை, என்று சமாளித்தார். இருப்பினும், சிலையை மாற்றுவதற்கான நடவடிக்கையை, கோவில் நிர்வாகம் எடுத்து வருவதாகவும், அவ்வாறு மாற்றப்பட்டால், பக்தர்கள் ஒருங்கிணைந்து போராட்டங்களை நடத்துவதாகவும், அப்பகுதியினர் கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !