உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யார் தலை மீது விழும் வரதராஜர் தேர் கூரை?

யார் தலை மீது விழும் வரதராஜர் தேர் கூரை?

காஞ்சிபுரம் : வரதராஜ பெருமாள் கோவில் தேரின் மேற்கூரைகள், வர்தா புயலால் கலகலத்து, யார் தலை மீது விழலாம் என்ற நிலையில் உள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று வீசிய, வர்தா புயலால், காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் தேரின் மேற்கூரைகள் காற்றில் பறந்து, சின்னாபின்னமானது. தேரின் மேற்கூரைகள் தடிமனான அலுமினிய தகட்டால் ஆனது. இந்த தகடுகள், பெயர்ந்து காந்தி சாலையில் விழுந்தது. வாகன ஓட்டிகள் யார் மீதும் இந்த தகடுகள் விழாததால், அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.இந்நிலையில், தேரின் கூரைகள் அனைத்தும் அபாயகரமான நிலையில் உள்ளதாகவும், அவை, ஆடிக் கொண்டிருப்பாகவும் கூறப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக, வரதராஜபெருமாள் கோவில் நிர்வாகம், விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !