உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை அருவியில் குளிக்க பக்தர்கள் வருகை

உடுமலை அருவியில் குளிக்க பக்தர்கள் வருகை

உடுமலை : உடுமலை அருகே திருமூர்த்திமலையில் மும்மூர்த்திகளும் சங்கமித்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மேல் பஞ்சலிங்கம் அருவியும் அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து அதிக அளவில் இக்கோவிலுக்கு வருகை தருவர். நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளும் ஓரளவும், ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் இங்கு வந்தனர். கோவிலில் சாமிதரிசனம் செய்து விட்டு பஞ்சலிங்கம் அருவிக்கு சென்று நீராடி மகிழ்ந்தனர். கோவில் மலைமேல் உள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு செல்பவர்களிடம் நுழைவு கட்டணம் 5 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதில் அருவி பகுதியில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் அருவி பராமரிக்கும் பொறுப்பை வனத்துறை எடுத்துக்கொண்டது. இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது மீண்டும் பராமரிப்பு பணியை வனத்துறை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !