ஐயப்பன் கோவிலில் இன்று பிரம்மோற்சவம்
ADDED :3254 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், ஐயப்பன் கோவில், 22ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று துவங்கு கிறது. குமாரபாளையம், அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, இன்று (டிச.,16) காலை, 8:00 மணிக்கு, துவங்குகிறது. வரும், 18ல் கலச பூஜை, கலச அபிஷேகம், 22 இரவு, 9:00 மணிக்கு பள்ளி வேட்டை, பள்ளி கருப்பா, சயனவாசம் ஆகியவை நடக்கின்றன. வரும், 23 காலை, 6:00 மணிக்கு பள்ளி உணர்த்தல், மதியம், 1:00 மணிக்கு கலச பூஜை செய்து கொடியிறக்கம் நடக்கவுள்ளது. டிச., 24ல், அஷ்ட திரவிய மகா அபிஷேகம், 25ல் மண்டல பூஜை, சிறப்பு பஜனை, அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளன. ஜன., 14ல், அரங்கநாதர் ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம், புஷ்பாஞ்சலி விழா நடக்கிறது.