உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை மாதத்தின் மஹிமைகள்!

கார்த்திகை மாதத்தின் மஹிமைகள்!

வருடத்தில் எல்லா மாதங்களும் எம்பெருமானுக்கு உகந்த மாதங்களாயினும் இக் கார்த்திகை மாதத்திற்கு என்று தனிச்சிறப்பு உள்ளது. இறைவன் பாதம் தொழ இம்மாதம் மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் ஸ்நானம், தீபம் மற்றும் தானம் விசேஷம் எனக் கூறுவர்.

கார்த்திகை ஸ்நானம்:

கார்த்திகை மாதம் என்றவுடனே புனித தீர்த்தங்களில், கிணற்றில் அல்லது நம் வீட்டில் உள்ள தண்ணீரில் அதிகாலையில் எழுந்து சங்கல்பம் செய்து கொண்டு பகவானை நினைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும்.

கார்த்திகை தீபம்:

கார்த்திகை மாதம் ஸ்நானத்தின் பிறகு சுத்தமான ஆடை உடுத்திக்கொண்டு தீபங்கள் ஏற்றுவது வழக்கம். தீபம் நெய்யினாலோ அல்லது நல்லெண்ணையாலோ ஏற்றலாம். பஞ்ச எண்ணையினால் (நெய், இளுப்பை, நல்லெண்ணை, விளக்கெண்ணை, கடுகு எண்ணை கலந்த எண்ணை) தீபம் ஏற்றுவது சிறப்பு. இம்மாதத்தில் பகவானுக்கு மிகவும் பிடித்தமான எவ்விடத்திலும் மலிவாக கிடைக்கும் நெல்லிக் கனியின் மேல் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு. தீபம் ஏற்றுவது மட்டுமல்லாமல் தீபத்திற்கு தேவையானப் பொருட்களை பிறருக்கு கொடுப்பதும் சிறந்த பலனை அளிக்கும். இவ்வாறு தீபம் ஏற்றி வழிபடுவதால் ஸ்வாமி நம்மை சம்சாரம் என்ற துக்கத்திலிருந்து நம்மை விடுவிப்பார். 1008,108,54 அல்லது 27 இப்படி அவரவர் சக்திக்கேற்றவாறு தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றும் விளக்கு அல்லது பாத்திரம் பிரம்ம தேவரும், எண்ணையில் மஹாலக்ஷ்மியும் திரியில் வாசுதேவரும், விளக்கொளி வெள்ளை நிறத்தில் வாயு பகவானும், சிவப்பு நிறத்தில் இந்திரனும், கருப்பு நிறத்தில் சிவனும் இருப்பதாக ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !