கார்த்திகை மாத தானம்
கார்த்திகை மாதத்தில் ஸ்நானம் செய்வதும், இறைவனை தரிசிப்பதும், பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் மட்டுமின்றி பிறருக்கு தானம் செய்வதாலும் மிகுந்த நன்மைகளைப் பெறலாம்.
1. வஸ்திர தானம் செய்வதால் வைகுண்ட பிராப்தி கிடைக்கும்.
2. தாம்பூல தானம் செய்வதால் சக்கரவர்த்தி ஆகும் வாய்ப்பு கிடைக்கும்.
3. பலதானத்தினால் பாவம் நாசனமாகும்.
4. கார்த்திகை மாதம் முழுவதும் பசுநெய்யால் விளக்கேற்றி பவுர்ணமி அன்று தானம் செய்வதால் அவர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐச்வர்யம், வித்யை விருத்தியடையும். சந்தான ப்ராப்தியும் ஏற்பட்டு எல்லா லோகங்களிலும் சுகபோகப் ப்ராப்தியும் கிடைக்கும்.
5. சாலிக்கிராமம், துளசி தானம் செய்தால் பூமி தானம் செய்த பலன் கிடைக்கும்.
6. இம்மாதத்தில் செய்த ஸ்நானம், தானம் செய்பவர்களை எவ்வித தீங்கும் நேரிடாமல் காப்பாற்றினால் அவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலனளிக்கும்.
7. உபவாசம் இருந்த சிவபூஜை செய்து, எள் தானம் செய்தால் சிவலோக மகாப்ராப்தி கிடைக்கும்.
8. கார்த்திகை மாதம் சுத்த சதுர்த்தசி தினத்தில் பிராமணருக்கு அன்னதானம் செய்தால் பித்ரு தேவதைகள் திருப்தி அடைவர்.