கண்ணனின் ரதயாத்திரை!
ADDED :3615 days ago
பகவான் கிருஷ்ணர் விருந்தாவனத்தில் (பிருந்தாவனம்) இருந்து மதுராவுக்குச் சென்றபோது, அதுவரை கிருஷ்ண பிரேமையில் திளைத்திருந்த கோபிகைகள் பிரிவாற்றாமையால் வருந்தினார்கள். பின்னர் கிருஷ்ணர் துவாரகையில் அரசனாக முடிசூட்டிக்கொள்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு ஒருமுறை சூரிய கிரகணத்தின்போது கிருஷ்ணர், பலராமர், சுபத்திரையுடன் குருக்ஷேத்திரத்துக்கு வந்தபோது, விஷயம் தெரிந்து வந்த கோபிகைகள், அவரை திரும்பவும் விருந்தாவனத்துக்கு வரும்படி அழைக்கும் வைபவமே ரதயாத்திரை மஹோற்ஸவம் ஆகும். 500 வருடங்களுக்கு முன்பு சைதன்ய மகாபிரபு பூரி ஜகந்நாதர் கோயிலில் நிகழ்த்திய ரத யாத்திரை மஹோற்ஸவம், கோபிகைகள் கிருஷ்ணரை மறுபடியும் விருந்தாவனத்துக்கு அழைத்து வந்ததுபோல் உணர்ச்சிகரமான நிகழ்வாகத் திகழ்ந்தது.