உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி பிறப்பு: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

மார்கழி பிறப்பு: திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: மார்கழி பிறப்பை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தங்க நாகாபரணம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், மார்கழி பிறப்பையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், அதிகாலை, 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் மூலவருக்கு தங்க நாகாபரணம், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசம், உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபட்டனர்.

* தர்மபுரி வெளிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில், ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. நிகழ்ச்சிக்கு சம்பத் குருசாமிகள் தலைமை வகித்தார். விழாவை, ஹரிஹர சபரி யாத்திரை குழு ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !