அச்சன்கோவில் உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருநெல்வேலி: அச்சன்கோவில் உற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் உற்சவ விழாவையொட்டி காலையில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வந்து தங்க கொடிமரம் அருகே அருள் பாலித்தார். சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரரு தங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தினார். தொடர்ந்து மேள தாளம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து புனலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட திருஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்புதீபாராதனை நடந்தது. மாலையில் சிறப்பு நிகழ்ச்சி, சுவாமி சப்பர பவனி மற்றும் அன்னதானம் நடந்தது. தேவசம்போர்டு உதவிஆணையர் சுதீஷ்குமார், கோவில் நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கேரளா, மற்றும் தமிழக பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா தொடந்து 26ம்தேதி வரை நடக்கிறது. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல், கருப்பன் துள்ளல், அன்னதானம் நடக்கிறது. 24ம்தேதி தேராட்டம் நடக்கிறது. 25ம்தேதி ஆராட்டு விழாவும், 26ம்தேதி மண்டல பூஜையுடன் உற்சவ வி ழா நிறைவுபெறுகிறது.