பழநியில் குவிந்த பக்தர்கள்: 3 மணிநேரம் காத்திருப்பு
ADDED :3310 days ago
பழநி: ஞாயிறு பொதுவிடுமுறை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் குவிந்த பக்தர்கள் ஞான தண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்ய மூன்று மணிநேரம் காத்திருந்தனர். பழநி மலைக்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி சனி, ஞாயிறு தினங்களில் ஏராள மான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஞாயிறு பொதுவிடுமுறை என்பதால் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் வரை காத்திருந்தினர். மலைக்கோயில் பொது தரிசனவழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுத பாணிசுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 7 மணி தங்கரத புறப்பாட்டை காண பக்தர்கள் திரண்டனர்.